

புதுடெல்லி
பேங்க் ஆஃப் பரோடா தற்போது முடிந்த ஜூன் காலாண்டில் ரூ.710 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன.
இந்த மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு நிதி ஆண்டின் ஒரு காலாண்டு (ஏப்ரல் 2019 - ஜூன் 2019) முடிந்துள்ள நிலையில் அதன் காலாண்டு நிதி கணக்குகள் வெளியாகியுள்ளன.
மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில் அதன் லாபம் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள லாபம் எதிர்பார்க்கப்பட்ட லாபத்தை விட குறைவாக உள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத் தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனியாகவே ரூ.528 கோடியை லாபமாக ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ். ஜெயகுமார், ‘இந்த மூன்று வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த நிதியாண்டில் ஒரு காலாண்டுதான் நிறைவடைந்துள்ளது. தற்போது வாராக் கடன்களை தீவிரமாக மீட்கத் தொடங்கியுள்ளோம். அடுத் தடுத்த காலாண்டில் இன்னும் அதிகமான லாபத்தை ஈட்டும்’ என்று அவர் கூறினார்.
வங்கியின் மொத்த வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.22,056 கோடி யாக உள்ளது. சென்ற ஆண்டு அது ரூ.13,729 கோடியாக இருந்தது. மொத்த வட்டி வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.6,496 கோடியாக உள்ளது. வாராக் கடன்களின் அளவு 10.28 சதவீதமாக உள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் அது 12.46 சதவீதமாக இருந்தது. ஜூன் முடிந்த நிதியாண்டில் ரூ.3,566 கோடி அளவில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டை விட இது 14.22 சதவீதம் குறைவு ஆகும். சென்ற நிதியாண் டின் இதே காலத்தில் ரூ.4,167 கோடி அளவில் கடன்கள் அளிக்கப் பட்டு இருந்தன. வாராக் கடன் களுக்கான ஒதுக்கீடு ஜூன் காலாண் டில் ரூ.3,168 கோடியாக் குறைந் துள்ளது. சென்ற ஆண்டில் அது ரூ. 3,553 கோடியாக இருந்தது. நேற் றைய வர்த்தக முடிவில் அதன் பங்கு மதிப்பு 0.68 சதவீதம் குறைந்து ரூ.109.55-க்கு வர்த்தகமானது.
பொதுத் துறை வங்கிகளில் எஸ்பிஐக்கு அடுத்து பெரிய வங்கியாக கருதப்படும் பேங்க் ஆஃப் பரோடாவுக்கு 9,500 கிளைகள் உள்ளன.