Published : 26 Jul 2019 10:19 AM
Last Updated : 26 Jul 2019 10:19 AM

எரிசக்தி துறைக்கு மாற்றப்பட்டதன் எதிரொலி விருப்ப ஓய்வு: சுபாஷ் சந்திர கார்க் முடிவு

புதுடெல்லி

மத்திய அரசின் நிதி செயலாளராக பதவி வகித்து வந்த சுபாஷ் சந்திர கார்க், தற்போது எரிசக்தி துறையின் செயலாளராக பதவி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்.

சுபாஷ் சந்திர கார்க் கடந்த 2017 ஆண்டு ஜூன் மாதம் பொருளா தார விவகாரத் துறையின் செயலா ளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பணிமூப்பு அடிப்படை யில் கடந்த ஆண்டு நிதி செயலா ளராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது நிதித் துறையில் இருந்து எரிசக்தி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப் பித்து உள்ளார். இவர் 1983-ம் வருடத்திய ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியாவார்.

நிதித்துறையைக் காட்டிலும் எரிசக்தித் துறை செயலர் பதவி சற்று குறைந்தது என்பதால் கார்க் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. அவருடைய பணிக்காலம் 31 அக்டோபர் 2020 அன்று வரை உள்ள நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நிதி செயலாளராக, நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகள், நிதிக் கொள்கை ஆகியவற்றில் இவரது பங்களிப்பு கணிசமானது.

மத்திய அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மீதான நடைமுறை ஒப்புதல் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவருடைய பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜூலை 23 அன்று அவர் எரிசக்தி துறையின் செயலாளராக மாற்றப்பட்டார். ஜூலை 24 அன்று அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்.

இந்நிலையில், சுபாஷ் சந்திர கார்குக்கு பதிலாக முதலீடு மற்று பொது சொத்து மேலாண்மை துறை செயலாளரான அதானு சக்ரவர்த்தி தற்போது பொருளாதார விவகாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அஜய் குமார் பல்லா தற்போது உள் துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள் ளார். அவர் ஆகஸ்ட் 31 முதல் உள் துறை செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்.

தற்போது நிதி அமைச்சகத்தில், நிதிச் சேவை செயலாளராக ராஜீவ் குமார் (ஐஏஎஸ் - ஜார்கண்ட்; 1984), வருவாய் செயலாளராக அஜய் பூஷணை பாண்டே (ஐஏஎஸ் - பிஹார்; 1984), பொருளாதார விவகாரத் துறை செயலாளராக அதானு சக்ரவர்த்தி ( ஐஏஎஸ் குஜராத் ; 1985), செலவினங்களுக்கான செய லாளராக ஜி சி முர்மு (ஐஏஎஸ்- குஜராத்; 1985), முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளராக அனில் குமார் காச்சி (ஐஏஎஸ் - இமாச்சல் பிரதேசம்; 1986) ஆகியோர் உள்ள னர். இந்த ஐந்து பேரைக் கொண்டதுதான் நிதி அமைச் சகமாகக் கருதப்படுகிறது.

தற்போது 12 துறைகளில் உள்ள அதன் செயலாளர்களை மத்திய அரசு துறை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x