தகவல் திருட்டால் நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி இழப்பு

தகவல் திருட்டால் நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி இழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

இந்திய நிறுவனங்கள் தகவல் திருட்டால் கடந்த ஆண்டில் மட்டும் சராசரியாக ரூ.12.8 கோடி அளவில் இழப்பை சந்தித்துள்ளதாக ஐபிஎம் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகாளாவிய அளவில் நிறுவனங் களுக்கு தகவல் திருட்டால் சராசரியாக ரூ.27 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனம் சார்பில், தகவல் திருட்டால் நிறுவனங் களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய் வின் முடிவில் ஜூன் 2018 முதல் ஏப்ரல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் தகவல் திருட்டால் நிறுவனங்கள் சராசரி யாக ரூ.12.8 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியா இந்த வரிசையில் 15 இடத்தில் உள்ளது. இந்தியா வில் தகவல் திருட்டால் ஏற்படும் இழப்பு இந்த ஓரு ஆண்டில் மட்டும் 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள், வாடிக்கை யாளர் சேவை மற்றும் ஊழியர்களின் உழைப்பு ஆகியவற்றை உள்ள டக்கி இந்த பண இழப்பு கணக் கிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐபிஎம் இந்தியா வின் பாதுகாப்பு மென்பொருள் துறைத் தலைவர் வைத்தியநாதன் ஐயர் கூறியபோது, சைபர் கிரைம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. இதற் கென்று தனி அமைப்பே செயல்பட்டு வருகிறது. மிக நவீன தொழில் நுட்பங்களுடன் இவ்வித மான குற்றச்செயல்கள் செய்யப் படுகின்றன. தகவல் திருட்டால் ஏற்படும் இழப்பும் ஒவ்வொரு ஆண்டுக்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நிறுவனங்கள் தகவல் திருட்டை தடுப்பதற்கான பாது காப்பு வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.

51 சதவீத தகவல் திருட்டுகள் குற்றக் நோக்கத்துடன் நடைபெறு கிறது., 27 சதவீத தகவல் திருட்டுகள் கணினி குளறுபடிகளாலும், 22 சதவீதம் மனித தவறுகளாலும் நடைபெறுவதாக அந்த ஆய்வ றிக்கை தெரிவிக்கிறது. மருத்துவ நிறுவனங்களில் அதிக அளவில் தகவல் திருட்டு நடைபெறுவதாக வும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தகவல் திருட்டை கண்டுபிடிப்ப தற்கான கால அளவும் தற்போது உயர்ந்துள்ளது. முன்பு 188 நாட்களாக இருந்தது தற்போது 221 நாட்களாக மாறியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் அதிக அளவு தகவல் திருட்டு நடைபெறுகிறது. தகவல் திருட்டு காரணமாக அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 56.46 கோடி அளவில் இழப்பை சந்திக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் உலகாளவிய அளவில் 12 ஆயிரம் கோடி தகவல் திருட்டுகள் நடைபெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in