

பெங்களூரு
பொதுச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் மூலம் கடன் திரட்டு வது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா எச்சரித் துள்ளார்.
அரசு கடன் வாங்குவதால் தனியார் நிறுவனங்களுக்கு வெளிச் சந்தையில் கடன் கிடைப்பது மிகப் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவியிலிருந்து வெளியேறும் அவர், தனது பதவிக் காலத்துக்கு முன்பே விடுவிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி அவர் நேற்றுடன் பதவியிலிருந்து வெளி யேறுகிறார். வீரல் ஆச்சார்யா நிகழ்த்திய முக்கியான உரைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அரசையும் ரிசர்வ் வங்கியை யும் கடுமையாக தாக்கியுள்ளார்.
2000-வது ஆண்டில் இந்தியா வின் கடன் வாங்கும் அளவானது 67 சதவீதமாக இருந்தது. அது தற் போது 85 சதவீதமாக அதிகரித்துள் ளது. இது சீனா வாங்கும் கடன் அளவை விட அதிகமாகும் என்றும் வீரல் ஆச்சார்யா சுட்டிக் காட்டியுள் ளார்.
பொதுச் சந்தையில் கடன் திரட்ட அரசு வெளியிடும் பத்திரங்கள் மீது நம்பகத்தன்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களால் முதலீடு கள் அதிகம் கிடைக்கும். அதேசம யம் கூடுதல் வட்டி அளிப்பதாக நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் மக்கள் முதலீடு செய்வது குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மக்கள் ஏஏஏ-தகுதிச் சான்று பெற்ற கடன் திட்டங்களில்தான் முதலீடு செய்வர் என்றும், இதனால் நிறுவன கடன் திட்டங்களில் முதலீடுகள் குறையும் என்றும் குறிப்பிட்டார்.
2019-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி கடனுக் கான வட்டி விகிதத்தைக் குறைத் தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
அரசு மானிய உதவி உள்ளிட்ட வற்றை குறைத்து நீண்ட கால அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை செயல்படுத்துவ திலிருந்து வெளியேறுவதன் மூலம் வளர்ச்சி சாத்தியமாகலாம் என்றார். நிலம், தொழிலாளர் மற்றும் வேளாண் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை. இவைதான் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்குகின்றன என்றார்.
ரிசர்வ் வங்கியின் கூடுதல் கையி ருப்பை மத்திய அரசு கோருவதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் வீரல் ஆச்சார்யாதான். கடந்த ஆண்டு அக்டோபர் 26-ல் இவர் தெரிவித்த கருத்துகளால் அரசு தரப்பில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முந்தைய கவர்னர் உர்ஜித் படேலின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என கருதப்பட்ட வீரல் ஆச்சார்யா, படேல் விலகிய போதே ராஜிநாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.