நிதிக்கொள்கை முடிவுகளை எடுப்பது ரிசர்வ் வங்கிதான்

நிதிக்கொள்கை முடிவுகளை எடுப்பது ரிசர்வ் வங்கிதான்

Published on

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை எடுப்பது நான்தான். அரசாங்கம் என்னை நீக்கமுடியும், ஆனால் அது எந்தவிதமான நிதிக் கொள்கை முடிவுகளையும் எடுப்பதில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி தனிப்பட்ட அமைப்பு. நாங்கள் அரசாங்கத்திடம் பேசுகிறோம். அரசாங்கத்தின் கருத்துகளை கேட்கிறோம். ஆனால் வட்டிவிகித முடிவுகளை நான் தான் எடுக்கிறேன் என்று ஸ்விட்சர்லாந்தில் அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கிக்கு எந்தளவுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது என்ற கேள்விக்கு இந்த பதிலை கொடுத்தார்.

மேலும், வளர்ச்சி பற்றி பேசும் போது பணவீக்கத்தை குறைக்காமல் வளர்ச்சி சாத்தியம் ஆகாது என்றார். புதிதாக அமையும் அரசு, ரகுராம் ராஜனின் நியமனத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 3-ம் தேதி தெரிவித்தார். அதற்கு முன்னதாக, ரகுராம் ராஜனின் பதவி பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in