பேமென்ட் வங்கியை மூட பிர்லா குழுமம் முடிவு

பேமென்ட் வங்கியை மூட பிர்லா குழுமம் முடிவு
Updated on
1 min read

மும்பை

ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கி விரைவில் மூடப்பட உள்ளதாக அதன் வங்கிக் குழு தெரிவித்துள்ளது. அதன் வங்கிக் கணக்குகளில் வைப்புத் தொகை கொண்டிருக்கும் வாடிக் கையாளர்கள் வரும் ஜூலை 26 க் குள் அந்த வைப்பு தொகையை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று அதன் வங்கிக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

2015-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏழு பேமென்ட் வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. ஆதித்யா பிர்லா நுவோ வங்கி அவற்றில் ஒன்று. பேமென்ட் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். ஆனால் பேமென்ட் வங்கிகள் யாருக்கும் கடன் வழங்க இயலாது. 2016 ஆண்டு ஐடியா தொலைதொடர்பு நிறுவனம் ஆதித்யா பிர்லா நுவோ வங்கியுடன் இணைந்த நிலையில் ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கி என அது பெயர்மாற்றம் கொண்டது. கடந்த ஆண்டு பிப்ர வரியில் இந்த வங்கி செயல்பாட் டுக்கு வந்தது. நடைமுறைச் சிக்கல் கள் காரணமாக தொடர்ந்து செயல் படாத நிலையில் இந்த வங்கி விரைவில் மூடப்பட உள்ளது.

இதுகுறித்து அந்த வங்கிக் குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது வணிக வழிமுறைகளில் எதிர்பார்த்திராத அளவிற்கு மாற் றங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பேமெண்ட் வங்கி சேவைகள் நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற் றவையாக மாறியுள்ளன. எனவே ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் வங்கியை மூட முடிவெடுத்துள் ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

வரும் ஜூலை 26 முதல் எந்த பணப்பரிவர்த்தனையும் இந்த வங்கியில் மேற்கொள்ள இயலாது. வாடிக்கையாளர்களுக்கு அவர் களுடைய வைப்பு நிதியை முழு மையாக கிடைக்கப்பெறச் செய் வதற்கான வழிமுறைகளை அவ் வங்கி ஏற்படுத்திவருகிறது. ஜூலை 26-க்குள் வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் உள்ள அவர்க ளுடைய வைப்பு நிதியை வேறே தெனும் வங்கிக் கணக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் 3 மாதங்களில் ஆதித்யா பிர்லா ஐடியா பேமென்ட் பேங்க் முழுமையாக மூடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in