

சிகாகோ
பிரெக்ஸிட் பிரச்சினை காரணமாக பாங்க் ஆஃப் இங்கிலாந்து (பிஓஇ) தலைவர் பதவிக்கு தான் விண் ணப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சமீப கால மாக மத்திய வங்கிகளின் செயல் பாடுகள் மிகுந்த அரசியல் குறுக்கீடு களுக்கு உள்ளாகின்றன. இதன் காரணமாகவே தான் அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைவராக உள்ள மார்க் கார்னே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் துடன் ஓய்வு பெற உள்ளார். இந்தப் பதவிக்கு அனுபவம் வாய்ந்தவர்களை இங்கிலாந்து அரசு தேடி வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகு ராம் ராஜனின் பெயரும் பரிசீலிக்கப் பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, தான் விலகி இருக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் அரசியல் சூழலை நன்கு உணர்ந்த அந்த நாட்டைச் சேர்ந்தவரே வங்கியின் தலைவராக பொறுப்பேற்பது சிறப்பானதாக இருக்கும் என்றும் ராஜன் குறிப்பிட்டார். மேலும் தான் வெளி நாட்டைச் சேர்ந்தவன் என்பதும், இங்கிலாந்தைப் பற்றி தெரிந்தது குறைவானது என்றார்.
ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி மையத்தின் பொருளாதார பேராசிரியராக பணி புரிகிறார். சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) சமீபத்தில் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைவர் பொறுப் புக்கு தகுதி வாய்ந்தவர்களில் ரகுராம் ராஜனும் ஒருவர் என குறிப்பிட்டிருந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தி லேயே ரகுராம் ராஜனை பாங்க் ஆஃப் இங்கிலாந்தைச் சேர்ந்த பிலிப் ஹாமோன்ட் சந்தித்து பேசி யுள்ளார். ஆனால் அந்த விவரத்தை ராஜன் தெரிவிக்கவில்லை.தற் போது பேராசிரியர் பணி நிறைவாக உள்ளது. புதிதாக எந்த பதவிக் கும் விண்ணப்பிக்கவில்லை என் றார் ரகுராம் ராஜன்.