Published : 21 Jul 2019 08:40 AM
Last Updated : 21 Jul 2019 08:40 AM

தொடர்ந்து 11 ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் ஊதியத்தில் மாற்றம் இல்லை

மும்பை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலை வர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஒரே அளவி லான ஆண்டு ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

2008-09 ஆண்டில் அவருக்கான ஆண்டு ஊதியம் ரூ.15 கோடியாக இருந்தது. 2017-18-க்கான அந்நிறு வனத்தின் ஆண்டு அறிக்கையில் அவருடைய ஆண்டு ஊதியம் ரூ.15 கோடியாக குறிப்பிடப்பட்டுள் ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி ஒரே ஊதி யத்தை பெற்றுக்கொண்டிருக் கிறார்.

அதேவேளையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்ற முக்கிய உறுப்பினர்களின் ஆண்டு ஊதியம் இந்த காலகட்டங்களில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அவ ருடைய உறவினர்களான நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹிதல் ஆர் மெஸ்வானி ஆகிய இரு வரின் ஆண்டு ஊதியம் 2016-17 ஆண்டில் ரூ.16.58 கோடியாக இருந் தது. 2017-18 ஆண்டில் அது ரூ.19.99 கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், 2017-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1.7 லட்சம் கோடியாக இருந்தது. அது 2019 மார்ச் மாதத்தில் 3.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x