

நாக்பூர்
கடன் வழங்குவதில் வங்கித் துறை கள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றன என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சமீப காலங்களில் வங்கிகளில் வாராக் கடன்களின் அளவு அதி கரித்து வருகிறது. முறையற்ற அள வில் கடன்கள் அளிக்கப்படுவதால் இந்தப் பிரச்சினை உருவாகி உள் ளது. இதன் விளைவாக நியாய மாக கடன் தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு வங்கிக் கடன் மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவிகளை வங்கிகள் விரைந்து அளித்திட வேண்டும். அதே சமயம் வங்கிகள் கடன் பெறும் நிறுவனங்களின் செயல்பாடு களையும் அறிந்து கொள்வது அவசியம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நேற்று நாக்பூரில் இந்திய வங்கியின் மண்டலப் பிரிவு ஒன்றை தொடங்கி வைத்து பேசிய அவர், வங்கிகள் தங்கள் பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையை பின் பற்ற வேண்டும். கடன் வழங்குதலில் அவை கவனமாக செயல்பட வேண் டும். இந்த வகையில் தற்போது வங்கிகள் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றன என்று கூறினார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் வழங்கப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறி னார். மேலும் அவர், அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களுக்கான கடன்களை வங்கிகள் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றார். அதேபோல், மக்களும், தொழில் நிறுவனங்களும் தாங்கள் பெற்ற வங்கிக் கடன்களை உரிய நேரத் தில் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் 11 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உரு வாகி உள்ளன. பெரு தொழில் நிறுவனங்களை விட இவ்வகை யான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 10 சதவீத அளவில் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ளன.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முறையான கணக்கு வழக்குகளை கொண்டிருக்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்துக்குள் அவர்களுக்கு வங்கிக் கடன் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந் திர மோடி கூறியதை நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார். மேலும் அவர், கைத்தறி மற்றும் கைவினை தொழில்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கைத்தறி மற்றும் கைவினை தொழில் நிறுவனங்கள் பெரும் அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியது. அவற்றின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நலத்திடங்களை மேற்கொண்டு வருகிறது. சோலார் சர்கா திட்டம் பருத்தி நிலையமான வித்ரபாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இன்றி பெரும்பாலனோர் நகர்ப்புறம் நோக்கி வருகின்றனர். இதனால் கிராமப்புற பொருளா தாரம் தேங்கி விடுகிறது. அங்குள்ள வளங்களையும், மக்களின் திற னையும் பயன்படுத்தும் நோக்கில் சோலார் சர்கா திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப் புறங்களில் கைவினை கலைஞர்கள், பெண்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சோலார் சர்கா திட்டம் உருவாக்கப்பட்டது.
ஏற்றுமதி தரத்திலான ஆடைகள் நாக்பூரில் உள்ள விதர்பாவில் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவற்றை மேம்படுத்தும் நோக்கில் சோலார் சர்கா திட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.