Published : 20 Jul 2019 09:08 AM
Last Updated : 20 Jul 2019 09:08 AM

இந்தியாவின் எரிபொருள் தேவை ஆண்டுக்கு 4.2% உயரும்: பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடெல்லி

இந்தியாவின் எரிபொருள் தேவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்க இருக்கிறது. அதை எதிர்கொள் ளும் வகையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

2035 வரை ஆண்டுக்கு 4.2 சதவீதம் அளவில் இந்தியாவின் எரி பொருள் நுகர்வு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற் கேற்ற அளவில் சுத்திகரிப்பு நிலையங்களின் திறனை அதி கரிக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டுக்கான எரிசக்தி, சுற்றுச் சூழல் மற்றும் நீர் ஆற்றல் எல்லை களுக்கான கூட்டத்தில் அவர் கூறினார்.

தற்போது இந்தியா ஆண்டுக்கு 250 மில்லியன் டன் உற்பத்தி செய் யும் அளவில் எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையங்களைக் கொண் டிருக்கிறது. வரும் காலங்களில் எரி பொருள் நுகர்வு அதிகரிக்கும்பட்சத் தில் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் இதைவிட இன்னும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர், மின்சார வாகனங் களை ஊக்குவிக்கும் நடவடிக்கை கள் தீவிரமாக எடுக்கப்படும் பட் சத்திலும் இன்னும் சில ஆண்டு களுக்கு எரிபொருள் நுகர்வு குறையப்போவதில்லை என்றார். ஆண்டுக்கு 4.2 சதவீத அளவில் நுகர்வு அதிகரிக்க இருக்கிறது. எனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யங்களின் உற்பத்தி திறன் தற் போதுள்ள 250 மில்லியன் டன் என்கிற அளவிலிருந்து 450 மில்லி யன் டன் அளவாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதை நாம் கவனத்தில் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கச்சா எண் ணெயை மட்டுமல்லாமல், சுத்தி கரிக்கப்பட்ட எரிபொருள் தயாரிப்பு களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவோம் என்று எச்சரித்துள்ளார்.

2017-ம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தி தேவை 754 மில்லியன் டன் எண்ணெய் மூலம் உருவாக்கப் படும் ஆற்றலுக்கு நிகராக உயர்ந் தது. ஆனாலும், இந்தியாவின் தனிநபர் நுகர்வு இன்னமும் உலக சராசரியை விட குறைவாகவே உள்ளது. உலகளாவிய எரிபொருள் தேவையில் இந்தியாவின் பங்கு 2040-ம் ஆண்டில் 11 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தற்போது இருக்கும் அளவைவிட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x