

மும்பை
தனியார் வங்கியான யெஸ் வங்கி யின் பங்கு மதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருகிற நிலையில், அந்த வங்கியின் நிறுவனர்களில் ஒருவ ரான ராணா கபூருக்கு ரூ.7, 000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
முந்தையை நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.1,260 கோடியாக இருந்த யெஸ் வங்கியின் லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.113 கோடியாக குறைந்துள்ளது. இது 91 சதவீத வீழ்ச்சி ஆகும். அதன் வாரா கடன்களின் அளவும் அதிகரித்துள் ளது. முடிந்த ஜூன் காலாண்டில் மட்டும் புதிதாக ரூ.6,230 கோடி வாரா கடனாக பதிவாகி உள்ளது.
இந்நிலையில், பங்கு கணிப் பீட்டு நிறுவனமான ஜெப்ரீஸ், யெஸ் வங்கியின் பங்கு மதிப்பை ரூ.80-லிருந்து ரூ.50 ஆகக் குறைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யெஸ் வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரு கின்றன. இந்நிலையில் ராணா கபூர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.7,000 கோடி அளவில் குறைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி அளவில் இருந்த அவருடைய பங்கு மதிப்பு தற்போது ரூ.3,000 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.
2005 ஆண்டு ராணா கபூரும் அவருடைய உறவினர் அசோக் கபூரும் இணைந்து இந்த வங்கியை தொடங்கினர். வாரா கடன்கள் அதி கரித்து வந்த நிலையில் இந்த வங்கி கடந்த ஆண்டில் கடும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டது. இந் நிலையில் தலைமை செயல் அதி காரி பொறுப்பில் இருந்து ராணா கபூர் பதவி விலக நேர்ந்தது.
யெஸ் வங்கியின் பங்குகளில் 10 சதவீத்தை மட்டும் ராணா கபூர் வைத்துள்ளார். தனது பங்குகள் அனைத்தையும் தன் மகள்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி யிருந்தார். இந்நிலையில் அவரு டைய பங்கு மதிப்புகள் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. நேற்றைய வர்த்தக முடிவில் அதன் பங்கு மதிப்புகள் 12.80 சதவீதம் குறைந்து ரூ.85.80-க்கு வர்த்தகமானது. இந்நிலையில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்புகள் மேலும் சரியக்கூடும் என்று கூறப்படுகிறது.