

புதுடெல்லி
இந்தியாவில் பேட்டரி வாகனங் களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆட்டோமொபைல் உற் பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற 2019-ம் ஆண்டின் தொழில்முனைவோர் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா 2030-ம் ஆண்டில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும் என்றார். இதற்கான இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதில் பேட்டரி வாகனங்களுக்கு மிகவும் வள மான எதிர்காலம் உள்ளது. இந்தியா வில் 72 சதவீத இரு சக்கர வாகனங் களை பேட்டரி வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா வில் விற்பனை செய்வதோடு, ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு களும் அதிகம் உள்ளன என்றார்.
2025-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் செயல்படும் 150 சிசி திறனுக்குக் குறைவான 2 சக்கர வாகனங்கள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிதி ஆயோக் வகுத்துள்ளது. அதேபோல 2023-ம் ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு ஆட்டோக்கள் அனைத்தும் பேட்டரியால் இயங்குபவையாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவர் களுக்கு முக்கிய பங்கிருக்கும் என்றும் அமிதாப் காந்த் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் வறுமைக் கோட் டுக்குக்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். இந்த இலக்கை எட்டுவது எளிதல்ல. அதிக அளவில் தொழில்முனைவோர் உருவாகும் பட்சத்தில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா உலகமயமாக்கலுக்கு மாறி வருகிறது; இதனால் நகர்ப் புறம் நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. ஒரு நிமிடத்துக்கு 30 பேர் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர். இது ஸ்டார்ட் அப்களுக்கு மிகப்பெரும் வாய்ப் பாக அமையும் என்றார். நகர் மயமாதலால் நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மின்சார வாகனம் என பரந்துபட்ட துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றார்.
உலக அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் 13 சதவீத அளவுக்கு சரிந்த நிலையில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 66 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.