செய்திப்பிரிவு

Published : 17 Jul 2019 08:50 am

Updated : : 17 Jul 2019 08:51 am

 

பெடரல் வங்கி லாபம் 46 சதவீதம் உயர்வு

federal-bank-profits-rise-46-percent

புதுடெல்லி

தனியார் வங்கியான பெடரல் வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 384 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 46 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு (2018-19) ஜூன் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 262 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 3,620 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய வரு மானம் ரூ. 2,938 கோடியாகும். வட்டி மூலமான வருமானம் ரூ. 3,229 கோடியாகும். முன்பு இது ரூ. 2,667 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக் கடன் அளவு 2.99 சதவீதமாக இருந்தது. முன்னர் இது 3 சதவீதமாக இருந்தது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 192 கோடியாகும். முன்பு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 199 கோடியாக இருந்தது.

தனியார் வங்கிபெடரல் வங்கிலாபம்Federal Bankவருமானம்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author