Published : 17 Jul 2019 08:36 AM
Last Updated : 17 Jul 2019 08:36 AM

30 மாதங்களில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னிலை

புதுடெல்லி

பிரதம மந்திரி ரோஜ்கர் பிரட்ஷான் யோஜான (பிஎம்ஆர்பிஒய்) திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடிக்கு மேற்பட்ட நபர்கள் புதிய வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடாக, குஜராத் மற் றும் ஹரியாணா ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் காக கடந்த 2016-ம் ஆண்டு பிரதம மந்திரி ரோஜ்கர் பிரட்ஷான் யோஜான (பிஎம்ஆர்பிஒய்) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதி யம் ஆகியவற்றுக்கான நிதியை அரசே அளிக்கும் விதமாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தினால், ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்பு கள் உருவாகி உள்ளன. இந்த மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக் கையில் 57 சதவீத அளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர் நாடக, குஜராத் மற்றும் ஹரியாணா ஆகிய ஐந்து மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள் ளன.

மார்ச் 2019 வரை இந்த திட்டத்தினால் 1,18,05,003 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையில் மகா ராஷ்டிர மாநிலம் 18 சதவீதமும், தமிழ்நாடு 12 சதவீதமும், கர் நாடகா 10 சதவீதமும், குஜராத் 9 சதவீதமும், ஹரியாணா 8 சத வீதமும் பங்குவகிக்கின்றன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஐந்து மாநிலங்களில் மட் டும் மொத்த எண்ணிக்கையில் 57 சதவீத அளவில் இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர்.

ஒடிஷா, சத்தீஸ்கர், இமாச் சலபிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் கோவாவில் 1 சதவீத அளவில் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். அடுத்ததாக கேரளா, உத்ரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 சதவீத அளவிலும், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் 3 சதவீத அளவிலும் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா வில் 21,06,405 தொழிலாளர்களும், தமிழ்நாட்டில் 14,17,808 தொழி லாளர்களும், கர்நாடகாவில் 11,51,215 தொழிலாளர்களும் இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு பெற் றுள்ளனர். இந்த மொத்த எண்னிக்கையில் 40 சதவீத வேலைவாய்ப்புகள் மென்பொருள் சார்ந்த துறையில் உருவாகி உள்ளது. வர்த்தம், ஜவுளி, கட்டுமானம் சார்ந்த துறைகளில் தலா 7 சதவீத அளவிலும், பொறியி யல் துறைகளில் 5 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

ஆச்சர்யமளிக்கும் விதமாக முடிந்த மக்களவை தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் இந்த திட் டத்தால் வேலைவாய்ப்பு பெற்றவர் களின் எண்ணிக்கை அதிக அள வில் உள்ளது. 2018-19 காலகட் டத்தில் மட்டும் சராசரியாக மாதத் திற்கு 7 லட்சம் பேர் என மொத்தம் 87,46,888 பேர் இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x