

பெடரல் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் சரிந்து 141 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 220 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.ஆனால் வங்கியின் மொத்த வருமானம் 2,107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,928 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருந்ததால் நிகரலாபம் சரிந்தது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 22 கோடி ரூபாய் அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது 153 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது.ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 2.59 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.22 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 0.68 சதவீதத்தில் இருந்து 0.98 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
குஜாரத்தில் கிப்டி சிட்டி
கிப்ட் சிட்டி அமைக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறது. கிப்டி சிட்டி என்பது வெளிநாட்டு கிளை போன்றது. இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ்களில் 9 சதவீதம் பெடரல் வங்கி மூலமாக வருகிறது.