

புரொமோட்டர் ராகுல் பாட்டியா நிர்வாக செயல்பாடுகளில், பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் செய்திருப்பதாக செபியிடம் கங்வால் குற்றம் சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த செய்தி வெளியானதால் இண்டிகோவின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் இண்டிகோ நிறுவன நிர்வாக செயல்பாடுகளில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பணியை செபி தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் ராகுல் பாட்டியா குழுமம் இரண்டு புரொமோட்டர் நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயல்பட்டு வருவதாகவும், ராகேஷ் கங்வால் இண்டிகோ நிர்வாக செயல்பாடுகள் குறித்து தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் நிறுவனத்தின் வளர்ச்சியில் பாட்டியா குழுமம் அதிக அளவு ஈடுபாட்டுடன் இருந்ததாகவும், தனிப்பட்ட கடன்களை இண்டிகோ நிறுவனத்துக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் கங்வால் நிறுவன வளர்ச்சிக்காக நிதி சார்ந்து பெரிய அளவில் ரிஸ்க் எடுத்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறது.