Last Updated : 06 Jul, 2015 10:03 AM

 

Published : 06 Jul 2015 10:03 AM
Last Updated : 06 Jul 2015 10:03 AM

ஆன்லைன் மூலம் கருப்பு பண விவரங்களை தெரிவிக்கலாம்

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான கால அவகாசத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அந்த திட்டத்தின் மூலம் தனிநபர் களோ அல்லது நிறுவனங்களோ ஆன்லைன் மூலம் கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால் கட்டா யம் டிஜிட்டல் கையெழுத்து இருக்க வேண்டும்.

இந்தத் தகவல்களை நேரடியா கவோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆனால் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் போது எளிதாகவும், பாது காப்பாகவும் இருக்கும் என்றும் >https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக இரண்டு பக்க படிவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்க கூடுதல் இணைப்பில் வெளிநாட்டில் இருக்கும் சொத்துகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவேண்டும். மத்திய நேரடி வரி ஆணையம், இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ள தனி ஆணையரை நியமித்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் அவர், கருப்பு பணம் தொடர்பான அத்தனை விண்ணப் பங்களையும் கையாளுவார்.

கருப்பு பணம் பற்றிய தகவல்களை வெளியிட மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த தகவல்களை தெரிவிக்கலாம். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும் போது 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த காலத்துக்கு பிறகு கருப்பு பணம் பற்றிய தகவல் தெரியவந்தால் 120 சதவீத அளவுக்கு அபராதமும், சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த புதிய கருப்பு பண சட்டம் கடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x