Published : 11 Jul 2015 09:55 AM
Last Updated : 11 Jul 2015 09:55 AM

இவரைத் தெரியுமா?- குணால் பஹல்

இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தவர். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், மார்க்கெட்டிங் மற்றும் செயல்பாட்டு உத்திகள் சார்ந்த உயர்கல்வியும் பெற்றவர்.

நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த கெல்லாக் பிசினஸ் பள்ளியில் எக்ஸிகியூட்டிவ் புரோக்கிராம் மற்றும் மார்க்கெட்டிங் பயிற்சி பெற்றவர்.

படித்துக் கொண்டிருக்கும்போதே டிடெர்ஜெண்ட் நிறுவனம் தொடங்கினார், வால்மார்ட் கடையில் வேலைபார்த்துக் கொண்டே தனது பொருட்களை விற்பனை செய்தார்.

அமெரிக்காவில் டெலாய்ட் கன்சல்ட்டிங் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

நாஸ்காம் வழங்கிய அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் விருது-2014, டாப் 50 தொழில்முனைவோர் விருது-2014 உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

2014-ம் ஆண்டு பார்சூன் பட்டியல்படி இந்திய அளவில் 40 வயதுக்குட்பட்ட 40 தொழில்முனைவோர்கள் வரிசையில் 25-வது இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x