Published : 08 Jul 2015 09:50 AM
Last Updated : 08 Jul 2015 09:50 AM

தங்க பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

நடப்பு நிதி ஆண்டில் தங்க பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடி திரட்ட மத்திய திட்டமிட் டிருக்கிறது. இதற்கான அமைச் சரவை குறிப்பு இம்மாத இறுதி யில் தயாராகும் என்று தெரிகிறது. அரசாங்க கடன் பத்திரங்களுக்கு இணையாக தங்க பத்திரங்களுக்கு வட்டி இருக்கும் என்று கடந்த பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் பேசி வருகிறோம். அரசாங்கத்தில் இதர கடன் பத்திரங்களுக்கு இணையாக இந்த வட்டி விகிதம் இருக்கக்கூடும் என்று நிதி அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இதன் பத்திரங்கள் மூலம் ரூ.15,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறோம்.

இது சிறு முதலீட்டாளர் களுக்காக இந்த பத்திரங்கள் வெளியிடப்படும் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் 300 டன் தங்கம் இறக்குமதி செய்யப் படுகிறது. இதில் கணிசமான தொகையை பத்திரங்களாக மாற்றுவதற்கு நிதி அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. இதற் கான இறுதிவடிவம் மற்றும் காலம் ஆகியவை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அடுத்த நிதி ஆண்டு முதல் அரசாங்கம் கடன் வாங்கும் திட்டத்தில் இதுவும் சேர்க்கப்படும் என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் 3.6 லட்சம் கோடி ரூபாய் முதல் காலாண்டில் வாங்கப்படும்.

தங்கம் வாங்குவதில் விற்பதில் என்ன வரி விதிப்பு முறைகள் இருக்கின்றனவோ அதே வரி விதிப்பு முறைதான் இதற்கும் விதிக்கப்படும். 2 கிராம், 5 கிராம் மற்றும் 10 கிராம் பத்திரங்கள் வெளியிடப்படும். இந்த பத்திரங் களின் முதலீட்டுக் காலம் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளாக இருக்கும். அப்போதுதான் குறுகிய கால ஏற்ற இறக்கங்களினால் முதலீட் டாளர்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியும் என்று மூத்த அதிகாரி கூறினார்.

இந்தியாவில் 20,000 டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கணிக்கப்பட் டுள்ளது.

தங்கம் வாங்குவதில் விற்பதில் என்ன வரி விதிப்பு முறைகள் இருக்கின்றனவோ அதே வரி விதிப்பு முறைதான் இதற்கும் விதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x