40 கோடி இளைஞர்களுக்கு தொழில் திறன் அளிக்க திட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்

40 கோடி இளைஞர்களுக்கு தொழில் திறன் அளிக்க திட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்
Updated on
2 min read

மத்திய அரசு அடுத்த 7 ஆண்டு களுக்குள் 40 கோடி பேரை தொழில் திறன் மிக்கவர்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில் திறன் மேம்பாட்டு அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

மத்திய உருக்கு மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு பயிற்சி அளிப்பது தொடர் பாக தேசிய திறன் மேம்பாட்டு மையத்துடன் மத்திய தொழில் திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களிடம் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியது:

சர்வதேச இளைஞர் திறன் நாளான ஜூலை 15-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்காக பிரதம மந்திரி குஷால் விகாஸ் யோஜனா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ஏற்கெனவே உள்ள 40 கோடி பேரும் ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டு தானிருப்பர். அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை திறன் மிக்கவர் களாக்குவதுதான் முக்கிய பணி யாகும். இதற்காக பல்வேறு அமைச் சகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட் டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி உருக்கு மற்றும் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் அதன் துணை நிறுவனங்களும் இணைத்துக்கொள்ளப்படும். பயிற்சி அளிப்பதற்கு தேவையான இடத்தை அரசு நிறுவனங்களில் பயன்படுத்தாத இடத்தை திறன் மேம்பாட்டு அமைச்சகம் பயன்படுத்திக் கொள்ளும்.

இதை எந்த வகையில் செயல் படுத்துவது என்பது குறித்தும், கட்டமைப்பு வசதிகள், அதற்குத் தேவையான மனித வளம், பயிற்சிக் கான தேவைகள், யாருக்கெல்லாம் பயிற்சி தேவை என்பதை கண்டறி வது உள்ளிட்ட விஷயங்கள் முன்ன தாக விவாதிக்கப்பட்டு பிறகு பயிற்சி அளிக்கப்படும் என்று ரூடி கூறினார்.

அரசு உருக்கு மற்றும் சுரங்கத் துறையில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவை யான நிதியை பொதுத்துறை நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிய தொகையிலிருந்து செலவிடப்படும் என்று மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

உருக்கு மற்றும் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 9 பொதுத்துறை நிறுவனங்களும் தேசிய திறன் மேம்பாட்டு கார்ப்பரேஷனுடன் (என்எஸ்டிசி) ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதாக அமைச்சக செயலர் ராகேஷ் சிங் தெரிவித்தார். முதலாவது ஒப்பந்தம் செயில் நிறுவனத்துக்கும் என்எஸ்டிசி-க்கும் இடையே திங்கள் கிழமை (ஜூலை 13-ம் தேதி) கையெழுத்தாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதுபோன்று திறன் பயிற்சி ஒப்பந்தங்கள் பெட்ரோலியம், கனரக தொழில்துறை, நிலக்கரி, மின்சாரம், ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் செயலர் சுநீல் அரோரா தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களிடையே தொழில்திறனை உருவாக்கி அவர் களை தொழில் துறையினர் எதிர் பார்க்கும் அளவுக்கு திறன் மிக்கவர் களாக உருவாக்குவதோடு, சுயமாக தொழில் தொடங்கி நடத்தும் அளவுக்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in