Last Updated : 05 Jul, 2015 12:52 PM

 

Published : 05 Jul 2015 12:52 PM
Last Updated : 05 Jul 2015 12:52 PM

பொதுப்பங்கு வெளியீட்டுக்குத் தயார்: தேசிய பங்குச்சந்தை தகவல்

பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) குறித்து இதுவரை கருத்து தெரிவிக் காத தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ.), தற்போது ஐபிஓ வெளி யிட தயார் என தனது பங்குதாரர் களிடம் தெரிவித்திருக்கிறது. ஐபிஒ விதிமுறைகளுக்காக காத்திருப்ப தாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் பழமையான பங்குச்சந்தையான பாம்பே பங்குச்சந்தை ஐபிஓ வெளியிடுவது குறித்து ஒரு வருடத்துக்கு முன்பே பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டிருந்தது. ஆனால் இது குறித்து இன்னும் இறுதியான விதிமுறை வெளியிடப் படவில்லை.

சில விஷயங்களில் தெளிவு கிடைத்த பிறகு ஐபிஓ வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று இதில் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். முதலீட்டாளர்களில் 5 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை வைத்துக்கொள்ள முடியாது என்பது குறித்து தெளிவு வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய பங்குச்சந்தையின் முதலீட்டாளர்களில் 22 நிறுவனங் கள் 1 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருக்கிறார்கள். எல்.ஐ.சி (10.51%), எஸ்பிஐ (10.19%), எஸ்பிஐ கேப்ஸ் (3.9%) ஐஎப்சிஐ (5.55%), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (5%) மற்றும் ஐடிபிஐ (5%) நிறுவனங்கள் என்.எஸ்.இ நிர்வாகத்தை கடந்த வாரம் சந்தித்து இது குறித்து விவாதித்திருக்கின்றன. என்.எஸ்.இ. இயக்குநர் குழு கூட்டத் திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட் டிருக்கிறது. ஐபிஒ வெளியிட தயாராகி வருவதாக தெரிகிறது.

பங்குச்சந்தைகள் பட்டியல் செய்வது குறித்து விவாதித்து வருகிறோம். அதில் கட்டுப்பாடு சார்ந்த சில விஷயங்கள் உள்ளன என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

பங்குச்சந்தைகள் பட்டியலிடு வது குறித்து விதிமுறைகளை 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செபி வெளியிட்டது. அதில் 51 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்று செபி தெரிவித்திருந்தது.

இருந்தாலும் பிமல் ஜலான் தலைமையிலான கமிட்டி பங்குச் சந்தைகள் பட்டியலிடுவது குறித்த சாதகமான முடிவுகளைத் தெரிவிக்க வில்லை. செபி விதிமுறைகள் படி பங்குச்சந்தை பட்டியலிடும்போது அதே பங்குச்சந்தையில் பட்டிய லிடுவதை செபி விதிமுறைகள் தடுக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x