

டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஒரு பிரிவு தொழிலை பிரித்து புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்த புதிய நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ஆட்டோமொபைல் அசோசி யேஷன் (ஏஏ) நிறுவனத் துடன் சேர்ந்து தொடங்கப் பட்டிருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிவிஎஸ் ஆட்டோ அஸிஸ்ட் நிறுவனத்தில் டிவிஎஸ் ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் முதலீடு 51 சதவீதமாகவும், ஏஏ நிறுவனத் தின் முதலீடு 49 சதவீதமாகவும் இருக்கும்.
இந்த புதிய நிறுவனம் சாலை யில் பழுதடையும் வாகனங்களை பழுதுபார்க்கும் சேவையை செய்யும் நிறுவனமாகும். டிவிஎஸ் ஆட்டோமொபைல் இந்த தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வந்தாலும், சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இங்கிலாந்து நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.
ரூ.100 கோடி முதலீட்டுடன் இந்த நிறுவனம் தொடங்கப் பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் கார்களை பழுதுபார்க்கும். பிரத்யேக செயலிகள் மூலமாக வும் இந்த சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த சந்தை யின் மதிப்பு சுமார் 40 கோடி ரூபாயாக இருக்கிறது. மூன்று முதல் ஐந்து வருட கால இடைவெளியில் 10 மடங்குக்கு மேல் உயர்த்த இந்த நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
இங்கிலாந்து ஏஏ நிறு வனம் 40 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு 1.5 கோடி வாடிக் கையாளர்கள் இருக்கிறார்கள்.