

ஹெச்டிஎப்சி நிறுவனம் பல வகையான முதலீட்டு திட்டங்களின் மூலம் 90,000 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருக்கிறது. மாற்றத்தக்க கடன் பத்திரங்கள், வாரண்ட், என்.சி.டி என பல வகைகளிலும் நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இந்த தொகையை விரிவாக்க பணிகளுக்கு செலவிட ஹெச்டிஎப்சி திட்டமிட்டிருக்கிறது.
வரும் ஜூலை 28-ம் தேதி ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் பங்குதாரர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் ஹெச்டிஎப்சியின் தலைவர் தீபக் பரேக்கை மீண்டும் இயக்குநர் குழுவில் நியமிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிகிறது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் நிகர லாபம் 10.2 சதவீதம் உயர்ந்து 8,762 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் மொத்த வருமானம் 48,315 கோடி ரூபாயாக இருக்கிறது.