

பெங்களூரைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் பிகோஸ் ஹோட்டல்ஸ் அண்ட் பப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு வனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 2.30 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அனுமதி கோரி பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (பிஎஸ்இ) விண்ணப்பித்துள்ளது.
மொத்தம் 4.59 லட்சம் பங்கு களை இந்நிறுவனம் ஜூலை 23-ம் தேதி வெளியிடுகிறது. பங்கு ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ. 10 ஆகவும் உயர் மதிப்பு ரூ. 50 ஆகவும் நிர்ணயித்துள்ளது.
பெங்களூரில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் எனுமிடத்தில் 1989-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு பிரிகேட் ரோட், சர்ச் சாலை மற்றும் இந்திரா நகர் ஆகிய இடங்களில் 3 ஹோட்டல்கள் உள்ளன.