

உலகின் மிகப் பெரிய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சுனில் பார்தி மிட்டல் உருவாக்கியுள்ள ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
20 நாடுகளில் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் முழு வீச்சில் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக செல்லுலர் தகவல் சேவை (டபிள்யூசிஐஎஸ்) அளித்த தகவலின்படி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 30.03 கோடியாகும். சீன மொபைல் நிறுவனம் 62.62 கோடி வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
வோடபோன் நிறுவனம் 40.30 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சீனாவின் யுனிகாம் நிறுவனம் 29.90 கோடி வாடிக்கையாளர்களுடன் நான்காமிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மோவில் நிறு வனம் 27.41 கோடி வாடிக்கை யாளர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனம் 2ஜி, 3ஜி, 4ஜி உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது. இந்நிறுவனத்துக்கு 15 லட்சம் விநியோக மையங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் இந்நிறுவனம் அதிக பகுதியைச் சென்றடைந்துள்ளது.