

பசுமை வீடுகள் அமைப்பதில் முன்னிலை வகிக்கும் பத்து நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா தவிர்த்த, பிற முன்னணி நாடுகள் பட்டியலை அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. ஏனென்றால் பசுமை வீடுகள் என்கிற எண்ணமே அமெரிக்கா விலிருந்தான் உருவானது என்பதால், அமெரிக்கா பசுமை வீடுகள் அமைப்பதில் உலக அளவில் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது என்று கிரீன் பில்டிங் கவுன்சில் கூறியுள்ளது.
பசுமை வீடுகள் அமைக்கும் போது மின்சாரம் மற்றும் சுற்றுச் சூழல் சார்ந்த வடிவமைப்பை கருத்தில் கொண்டு லீட் (Leadership in Energy and Environmental Design) என்கிற தரக் குறியீட்டை இந்த அமைப்பு வழங்குகிறது. இந்த தரக்குறியீட்டில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடுகள் மற்றும் இந்த பசுமை வீடுகளின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.
இந்த புள்ளிகள் அடிப்படையில் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் இரண்டாவது ஆண்டாக இந்த பட்டியலை வெளியிடுகிறது. இந்த கவுன்சிலின் ரேட்டிங் முறை யை உலக நாடுகள் அங்கீகரித் துள்ளன. கனடா மற்றும் சீனா இந்த பட்டியலின் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
உலக அளவில் அமெரிக் காவுக்கு வெளியே பசுமை வீடுகள் கட்டுவது அதிகரித்துள்ளது. கட்டிட எண்ணிக்கை, பரப்பளவு மற்றும் தேதியைக் கொண்டு திட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து 1,883 திட்டங்கள் பதிவு செய்யப் பட்டு சான்றிதழ்கள் வாங்கப்பட் டுள்ளதாக இந்த கவுன்சில் தெரிவிக்கிறது.
கனடாவிலிருந்து 4,814 திட்டங்களும், சீனாவிலிருந்து 2,022 திட்டங்களும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுன்சில் கூறியுள்ளது.
பசுமை வீடுகளில் இடத்தை பயன்படுத்துவது, மின்சாரத்தை பயன்பாட்டை குறைப்பது மற்றும் நீராதரங்களை பயன்படுத்துவது, கரியமில வாயுவை குறைப்பது மற்றும் ஆரோக்கியமான சுற்று சூழலை கொண்ட வீடுகள், பணியாளர் என பல அடிப்படை பார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப் படுகிறது.
இந்தியா தற்போது பசுமை வீடுகள் அமைப்பதில் முன்னிலை வகித்து வருகிறது. எதிர்காலத்தில் நிரந்தரமாக இந்த பசுமை வீடுகள் அமைக்க இந்திய தொழி லதிபர்கள், அரசியல்வாதிகள் முடிவெடுக்க வேண்டும்.
முக்கியமாக அறிவிக்கபட் டுள்ள ஸ்மார்ட் நகரங்களில் இந்த திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்தவும் கவுன்சில் கூறியுள்ளது.