

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது தயாரிப்புகளான அமேஸ் மற்றும் பிரையோ கார்களில் உள்ள பிரேக் சிஸ்டத்தில் பழுது ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. மொத்தம் 31,126 கார்களில் இத்தகைய பழுது ஏற்பட் டிருப்பதை அறிந்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி யிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களில் இத்தகைய பழுது ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி 15,523 பிரையோ கார்களையும், 15,603 அமேஸ் கார்களையும் திரும்பப் பெற்று அவற்றிலுள்ள பழுதை நீக்கித் தர முடிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகைய பழுது நீக்கத்திற்கு வாடிக்கையாளர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.