

நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருக் கிறது. நிதி ஆயோக்கின் மற்ற இரு உறுப்பினர்களுக்கும் மத்திய இணை அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொடுக்கவும் முடிவெடுத்திருகிறது.
நிதி ஆயோக் தலைவருக்கு மத்திய அமைச்சருக்கு இணை யான அந்தஸ்து கொடுக்கப்பட் டிருந்தாலும், அவருக்கு அமைச் சரவை செயலாளருக்கு இணை யான சம்பளமே வழங்கப்படும்.
அதேபோல பிபேக் தேப்ராய் மற்றும் வி.கே. சரஸ்வத் ஆகிய இரு உறுப்பினர்களுக்கு மத்திய இணை அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொடுக்கப்பட்டாலும், மத்திய அரசின் செயலாளருக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ள பனகாரியாவுக்கு அழைப்பு விடுக்கப்படும்.