

பர்சனல் கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து நீண்ட நாள் இருக்கும், அதற் கான தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து மொபைல்போனின் வளர்ச்சியை கணிக்கத் தவறிவிட் டோம். மைக்ரோசாப்ட் செய்த மிகப்பெரிய தவறு இது என்று நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
இன்று ஆறு அங்குலம் உள்ள போன்கள்தான் அதிகம் விற்பனை யாகின்றன. இதனை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தத் தவறை மீண்டும் செய்யாமல் இருக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அடுத்து என்ன என்பது குறித்த ஆராய்ச்சியில் நிறுவனம் இயங்கிவருகிறது. எதிர் காலத்துக்கு எப்போதும் பயனுள் ளதை தயாரித்து வருகிறோம்.
கணிக்கத் தவறியதன் விளை வாக மொபைல் சந்தையில் அதற் கான சாப்ட்வேர் உபயோகத்தில் மைக்ரோசாப்டின் பங்கு குறிப் பிடத்தக்க அளவுக்கு இல்லாமல் போனது. இது பைத்தியக் காரத்தனமான முடிவாகக் கூட இருக்கலாம் என்று இஸட்டிநெட் எனும் செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட் டுள்ளார்.
மொபைல்போன் உபயோகத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த தான், இன்று வரை பர்சனல் கம்ப்யூட்டரை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
நோக்கியா நிறுவன செயல்பாடுகளில் மாற்றம் செய்யும் உத்தேசம் இல்லை என்று கூறிய அவர் அதற்கென புதிய உத்திகளை வகுக்க உள்ளதாகக் கூறினார்.