

டயர் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் மிச்சிலின் நிறுவனத்தின் சென்னை ஆலைக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே அமைந்துள்ள இந்த ஆலைக்கு தரச்சான்றை ஆட்டோமொபைல், மோட்டார் சைக்கிள் இண்டஸ்ட்ரீஸ் (யுடிஏசி) அமைப்பு வழங்கியுள்ளது.
தரம், தொழில்நுட்ப மேம்பாடு, தரமான பொருள்களை வழங்க வேண்டும் என்ற நிறுவனத்தின் நோக்கத்துக்கு துணை புரியும் விதமாக ஐஎஸ்ஓ 9001 மற்றும் ஐஎஸ்ஓ டிஎஸ் 16949 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் அதுல் ரெனவிகார் தெரிவித்துள்ளார்.