Last Updated : 28 Jul, 2015 10:42 AM

 

Published : 28 Jul 2015 10:42 AM
Last Updated : 28 Jul 2015 10:42 AM

முதலீட்டாளர்கள் அச்சப்படத் தேவையில்லை: பங்குச் சந்தை சரிவு குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு குறித்து முதலீட்டா ளர்கள் கவலைப்படத் தேவையில் லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் பங்குச் சந்தை மூலமாக நடைபெறும் அந்நிய செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்த பார்டிசிபேட்டரி நோட்ஸ் (பி நோட்ஸ்) எனப் படும் பரிவர்த்தனையில் கடுமை யான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் என பரிந்து ரைத்துள்ளது. பங்குச் சந்தையில் சந்தேகப்படும்படியான உயர்வு ஏற்படும் போது அதைக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற சமயத்தில் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) உள்ளிட்ட வரி விதிப்பு அமைப்புகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பார்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஆதாயமடையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் என்பதை செபி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கேமேன் தீவு எனும் பகுதி யிலிருந்து ரூ.85 ஆயிரம் கோடி பி-நோட்ஸ் மூலம் இந்திய சந்தையில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

ஆனால் இங்குள்ள மொத்த மக்கள் தொகையே 2010-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 54 ஆயிரம்தான் என்று அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதில் பயனடைந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான இக்குழு மொத்தம் 9 பரிந்துரைகளை அளித்திருந்தது.

இதனால் வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, முதலீடுகளையும், முதலீட்டாளர்களின் நலனையும் பாதிக்கும் எத்தகைய நடவடிக்கையையும் அரசு எடுக்காது என்று குறிப்பிட்டார்.

சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த பரிந்துரையில் அரசு எத்தகைய அணுகுமுறையை எடுக்கப் போகிறது என்று இப்போது கூறுவது கடினமானது. பங்குச் சந்தை வீழ்ச்சியைத் தடுக்கும் விதமாக எதிர் நடவடிக்கை எதையும் அரசு எடுக்காது. அதேசமயம் முதலீடுகளை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக் ெகையும் இருக்காது என்றார்.

இதனிடையே எஸ்ஐடி அளித்த பரிந்துரைகள் குறித்து பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), ரிசர்வ் வங்கி ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்யப்படும் என்று மத்திய வருவாய்த் துறைச் செயலர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இப்போதைய சூழ்நிலையில் எது குறித்தும் அச்சப்படத் தேவையில்லை என்று தாஸ் குறிப்பிட்டார்.

இதேபோல 2007-ம் ஆண்டும் பங்குச் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான ப. சிதம்பரம், அரசு உடனடியாக நடவடிக்கை எதையும் எடுக்காது என்று உறுதியளித்தபிறகே பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் பங்குச் சந்தையில் பி-நோட்ஸ் மூலமான முதலீடு ரூ. 2.85 லட்சம் கோடியாகும். இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத உயர் அளவாகும். அந்நிய நிறுவன முதலீடுகளில் பி-நோட்ஸ் முதலீடு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை 2009-ம் ஆண்டு வரை இருந்தது. 2007-ல் பி-நோட்ஸ் முதலீடு 50 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x