

ஒவ்வொரு ஆண்டும் டைகான் நடத்தும் தொழில்முனைவோ ருக்கான மாநாடு வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.
தொழில் முனைவு 360 என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த விழா நடக்க இருக்கிறது.
இதில், தொழில்துறை தலை வர்கள், தொழில் முனைவோர்கள், வென்ச்சர் கேபிடல் நிறுவ னங்கள், முதலீட்டாளர்கள் வங்கி யாளர்கள், கல்வியாளர்கள் என 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர் களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு கல்லூரிகளில் இன்குபேட்டர் மையம் அமைக்கிறது. 30 கல்லூரிகளில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
டை சென்னை பிரிவின் தலைவர் லஷ்மி நாராயணன் பேசுகையில், தொழில் முனை வோர்களது தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு டை உதவுகிறது. தொழில்துறை தலைவர்களையும், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் களையும் டை இணைக்கிறது என்றார்.