

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மாருதி சுசூகியில் தன்னுடைய முதலீட்டை குறைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 2 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. விற்றுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜூலை இடையிலான காலகட்டத்தில் இந்த பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் விற்றிருக்கிறது.
அதற்கு முந்தைய காலகட்டத்தில் 8.24 சதவீத அளவுக்கு மாருதி சுசூகி பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருந்தது. இப்போது 6.22 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கின்றன.