ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு: அமெரிக்காவை முந்துகிறது இந்தியா

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு: அமெரிக்காவை முந்துகிறது இந்தியா
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர் களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் வரும் 2017-ம் ஆண்டில் அமெரிக் காவை விட இந்தியாவில் ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2015-ம் ஆண்டில் 150 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கும் என்றும் இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 170 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஸ்டாட்ரஜி அனல்டிக்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் விளம்பர செயல்பாடுகள், நடுத்தர மக்களின் வருமானம், தவிர சந்தை படுத்துதல் ஆகிய காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிறுவனம் கணித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த வருடம் மட்டும் 11.8 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியவில் விற்கப்படும் என்று கூறியிருக்கிறது. 2015-ம் ஆண்டு சீனாவில் 45.8 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படும் என்றும், 2017-ம் ஆண்டு 50.5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 16.4 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்த வருடம் விற்கும் என்றும், 2017-ம் ஆண்டு 16.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in