

ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரி ராகுல் யாதவ் நீக்கப்பட்டிருக்கிறார். நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியை தேடும் பணி நடந்து வருவதாக இயக்குநர் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கவனிக்கத்தக்க அளவில் வளர்ந்து வரும் நிறு வனம் ஹவுசிங் டாட் காம் ஆகும். ஆனால் ராகுல் யாதவ் தவறான காரணத்துக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெற்றார்.
மும்பையில் நேற்று நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் இவரை நீக்கும் முடிவு எடுக்கப் பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இயக்குநர் குழு தெரிவித்தது. அவருடைய நட வடிக்கைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படவில்லை என்று இயக்குநர் குழு தெரிவித் திருக்கிறது.
நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ், சாப்ட் பேங்க் மற்றும் ஹீலியன் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் இயக்குநர் குழுவில் உள்ளனர்.
இயக்குநர் குழு மற்றும் செயல் பாட்டு கமிட்டி நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் என்று மனித வளத்துறை தலைவர் அனைத்து பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். ராகுல் யாதவ் நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் இன்னும் பல முக்கியமான முடிவுகளையும் இயக்குநர் குழு அறிவிக்கும் என்று தெரிகிறது.
இந்த முடிவை ராகுல் யாதவ் எதிர்த்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை கணித்த நிர்வாகம் உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் எந்த விதமான பிரச்சி னையும் செய்யாமல் ராகுல் யாதவ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ராகுல் யாதவ் மும்பை ஐஐடியில் படித்தவர். ஆனால் பாதியில் படிப்பை நிறுத்தி நண்பர்களுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
ஏப்ரல் மாத இறுதியில் நிறு வனத்தின் இயக்குநர் குழுவின் திறமை மீது சந்தேகம் இருப் பதாக கருத்து தெரிவித்து நிறுவனத்தை விட்டு விலகினார். ஆனால் மன்னிப்பு கேட்ட பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக தொடர்ந்தார்.
அதனை தொடர்ந்து மே மாத இறுதியில் நிறுவனத்தில் உள்ள தன்னுடைய அனைத்து பங்குகளையும் பணியாளர் களுக்கு எழுதி கொடுத்தார். இதன் மதிப்பு சுமார் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை இருக்கும்.
இதற்கிடையே கடந்த திங்கள் கிழமை ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தை குவிக்கர் (quikr) நிறுவனம் வாங்க திட்டமிட்டிருப்ப தாக வணிக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல செய்தியாளர்கள் ராகுல் யாதவுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள். இதில் 50 சதவீத நிறுவனத்தை விற்கும் திட்டம் இல்லை என்றும், 50 சதவீத நபர்களுக்கு அதற்கான சாத்தியம் உள்ளது என்றும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
நிறுவனத்தை விற்பது குறித்து எப்படி கேலியாக மின்னஞ்சல் செய்ய முடியும் என்று இயக்குநர் குழுமம் கூடிவிவாதித்து அவரை நீக்கி இருக்கிறது. இதுவரை அவரது செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தும், அவரது எதிர்காலத் துக்கு வாழ்த்தும் இயக்குநர் குழுமம் தெரிவித்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் திறமை மீது சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்து நிறுவனத்தை விட்டு விலகினார். ஆனால் மன்னிப்பு கேட்ட பிறகு சிஇஓ-வாக தொடர்ந்தார்.