

குடும்பம், சொந்தங்கள், அலுவலகம், நண்பர்கள் என எங்கெல்லாம் தொடர்புகள் உண்டோ, அங்கெல்லாம் டீல்கள் உண்டு. எல்லா டீல்களிலும் ஜெயிக்கவேண்டும் என்று நாம் எல்லோரும் விரும்புகிறோம். இதற்கு என்ன செய்யவேண்டும்? ஐந்து விஷயங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். .
ஜெயிப்பது என்றால் என்ன?
டீல்களில் ஜெயிப்பது என்றால் என்னவென்று நண்பர் முருகனிடம் கேட்டதற்கு.
“நான் யாரிடம் பேச்சு வார்த் தைகள் நடத்துகிறேனோ, அவர் கள் என் கருத்துக்களை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளவேண் டும், அதன்படி நடக்கவேண்டும்.’ என்றார் அவர்.
மிஸ்டர், முருகன், உங்கள் மறு பெயர் என்ன ஹிட்லரா அல்லது முஸோலினியா? சர்வாதிகாரிகள் சொல்வதை மட்டுமே எல்லோரும், எப்போதும் கேட்பார்கள், அதுவும், அந்த சர்வாதிகாரி கள் கையில் பதவியும், அதிகார மும் இருக்கும் வரையில்தான்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பேச்சு வார்த்தைகள் நடத் தும்போது, அடுத்தவர் உங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஏற் பார்கள் என்பது உங்கள் தலைக் கனத்தால் வருகிற பகல் கனவு. நீங்கள் பேசுபவரிடமும் இதே ஈகோவும், பகல் கனவும் இருந் தால், உங்கள் பேச்சு வார்த்தை ஒரு அடிகூட முன்னால் நகராது.
ஆகவே, டீல்களை வெற்றிகர மாக முடிக்க விரும்பினால், ஈகோவை ஒதுக்கி வையுங்கள். இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உணருங்கள்.
விட்டுக் கொடுத்தல்
”ஜெயிப்பது” என்னும் வார்த் தையைத் தவறாக புரிந்துகொண் டிருப்பதுபோல், “விட்டுக் கொடுத்தல்’ என்ற வார்த்தையை யும் நாம் தவறாகப் புரிந்துகொண் டிருக்கிறோம்.
விட்டுக் கொடுப்பது என்றால் நம் கருத்துகள், கொள்கைகள், லட்சியங்கள் அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு மறுதரப் பின் கால்களில் விழும் சரணாகதி யல்ல. உங்கள் சுய மரியாதையை நீங்கள் விட்டுக்கொடுக்கவே மாட் டீர்கள் என்பது எதிராளிக்குத் தெரியவேண்டும். அப்போதுதான், உங்களுக்கு மதிப்புக் கொடுப்பார், உங்கள் கருத்துகளைக் கேட்பார்.
பேச்சு வார்த்தைகளில் பிரச்சனைகளின் பல அம்சங்கள் பற்றி விவாதிப்போம். அவற்றுள் எந்த அம்சங்களில் நாம் முழு மையாக விட்டுக்கொடுக்கலாம், எவற்றுள் ஓரளவு விட்டுக்கொடுக் கலாம், எந்த அம்சங்களில் விட்டுக் கொடுக்கவே கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
இத்தகைய நிலைப்பாடு எடுக் கும்போது, நமக்கு உயிர்நாடியான சில அம்சங்கள் மறு தரப்பின ருக்கும் விட்டுக்கொடுக்க முடி யாதவையாக இருக்கலாம். அந்த சமயங்களில், பேச்சு வார்த்தைகள் முறிந்தே போகலாம். கோர்ட், வழக்கு என்று தீர்வுகள் இழுத் தடிக்கலாம். இந்தப் பலாபலன் களை நாம் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும்.
உயர்வு தாழ்வு மனப்பான்மைகள்
அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவது மனிதரின் அடிப் படைக் குணம். அவர்கள் நம்மை விடக் கீழ் நிலையில் இருந்தால், அவர்களைத் தூசாக நடத்து கிறோம்: உயரத்தில் இருந்தால், அவர்களை வைத்துக் காரியங்கள் சாதிக்க அவர்கள் காலடியில் விழுகிறோம், மனதுக்குள் பொறாமைப்படுகிறோம், தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறோம்.
பொறாமை வருவது போட்டி யால். வளர்ச்சியின் ஆதாரமே போட்டிதான். நம்மிடம் ஸ்கூட்டர் இருக்கிறது. பக்கத்து வீட்டுக் காரன் நானோ கார் வாங்கி விட்டான். அவனை மிஞ்ச நானோ வைவிடப் பெரிய கார் வாங்கு கிறோம். அதற்கு மாதத்தவணை கட்டுவதற்காக, அதிகமாக உழைக்கிறோம், அதிகமாகச் சம்பாதிக்கிறோம், அதிகமாக உழைக்கிறோம். பொறாமை, போட்டிதான் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல கம்பெனிகள், நாடு களின் வெற்றி ரகசியமும் கூட.
ஆனால், போட்டி பொறாமை களுக்குக் கடிவாளம் போட நாம் கற்றுக்கொள்ளவேண்டும். பேச்சு வார்த்தைக்குப் போகும்முன், எதிர் அணியினரின் பலங்களையும், பலவீனங்களையும் நம்மோடு ஒப்பிடுவோம். இது இயற்கையான குணம் மட்டுமல்ல, தேவையான ராஜதந்திர வியூகம். ஆனால், இந்தக் கணிப்பால் தாழ்வு மனப் பான்மையோ, உயர்வு மனப் பான்மையோ உங்கள் மனங் களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் அனுமானங்கள்
ஒப்பிடுவது போலவே, நமக்கு இயற்கையான இன்னொரு குணம், நாம் சந்திப்பவர்களை முதல் பார்வையிலேயே எடை போட்டு அவர்களைப் பற்றிய அபிப்பிராயங்களை மனதில் பதிவு செய்துகொள்வது. இதை முதல் கணிப்புதான் சிறந்த கணிப்பு (First impresion is the best impression) என்று சொல்வார்கள். ஆமாம், ஒரு வரை முதலில் சந்திக்கும்போதே, அவரிடம் பேசுவதற்கு முன்பா கவே, அவர் நல்லவரா, கெட்டவரா, திறமைசாலியா, அசடா என்று அனுமானம் செய்துவிடுகிறோம்.
ஆல்பெர்ட் மெஹ்ராபியான் (Albert Mehrabian), அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக் கும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர், சைலன்ட் மெஸேஜஸ் (Silent Messages) என்னும் புத்தகம் எழுதியிருக் கிறார். இந்த பிரபல புத்தகத் தில், “நாம் பிறரைப் பற்றி வைத் திருக்கும் அபிப்ராயங்களில் 55 சதவிகிதம் வெளித்தோற்றத்தால் மட்டுமே உருவாகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏராளமான சோதனைகளின் அடிப்படையில் மெஹ்ராபியான் தந்திருக்கும் இந்தச் சிந்தனை, மேதைகள் ஏற்றுக்கொண்டுள்ள கருத்து.
எல்லோரும் செய்வதால், ஒரு தப்பு சரியானதாகிவிட முடியுமா? முதல் பார்வையில், வெறும் வெளித்தோற்றத்தில் ஒருவரைக் கணிப்பது தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏன் தெரியுமா? இது அறிவு பூர்வமான எடைபோடல் இல்லை, வெறும் உணர்ச்சி பூர்வமான, மேலெழுந்தவாரியான கணிப்பு. ஒருவரைச் சந்திக்கும்போது ஏற் படும் முதல் தாக்கங்கள் முழுமை யானவையல்ல, ஒருவேளை அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டி வரலாம் என்னும் திறந்த மனத்தோடு இருங்கள்.
மற்றவரை மதித்தல்
வீரபாண்டிய கட்டபொம்மன் படம். சிவாஜியின் சிம்மக் குரல் வசனம். கிழக்கு இந்தியக் கம்பெனியின் திருநெல்வேலி கலெக்டர் ஜாக்ஸன் துரை கட்ட பொம்மனைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார். அரசனுக்கு உரிய மரியாதை தராமல், உட்கார ஆசனம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துப் பேசுகிறார். கட்ட பொம்மன் கட்டவேண்டிய கிஸ்தி (வரி)யைத் தரச் சொல்கிறார். கட்டபொம்மன் ரத்தம் கொதிக் கிறது. கர்ஜிக்கிறார்.
முறிகிறது பேச்சு வார்த்தை. முழங்குகிறது முரசு. தொடங்கு கிறது போர்.
அடுத்தவரை மதிக்காவிட்டால், பேச்சு வார்த்தைகள் பயனற்றுப் போகும் என்பதற்குக் கட்ட பொம்மன் ஜாக்ஸன் துரை சந்திப்பு நல்ல உதாரணம்.
பேச்சு வார்த்தைகள் நடக்கும் போது, ஒரு அணி அடுத்தவர் களுக்குச் சரியாசனம் தரவேண் டும், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும், அவர்களிடம் இனிமையாகப் பழகவேண்டும். அப்போதுதான், வேறுபடும் கருத்துக்களையும் உணர்ச்சி வசப்படாமல் விவாதிக்க முடியும், தீர்வுகள் காண முடியும்,
மாற்றான் தோட்டத்து மல்லி கைக்கும் மணம் உண்டு டீல் களில் ஈடுபடும் அத்தனை பேரும் மறக்கக்கூடாத, கடைப்பிடிக்க வேண்டிய தாரக மந்திரம் இது.
slvmoorthy@gmail.com