

ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராகுல் யாதவ் இன்னும் ஒரு மாதத்தில் புதிய நிறுவனம் தொடங்க இருப்பதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நீங்கள் செல்லும் பாதையில் சவால்கள் இல்லை என்றால், நீங்களே உங்களுக்கான சவால்களை உருவாக்க வேண்டும். இதை ஒரு பயிற்சியாக செய்துகொண்டிருந்தால் நீங்கள் மேலும் பலம் மிக்கவராக மாறுவீர்கள்.
நான் இந்த முறை மேலும் பலம் பொருந்தியவனாக வருவேன் அதற்கு இந்த உலகம் தயாரா? என்னும் கேள்வியுடன் தன்னுடைய பேஸ்புக் பதிவை முடித்திருக்கிறார்.
மீண்டும் ரியல் எஸ்டேட் துறையிலேயே களம் இறங் குவார் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.
கடந்த ஜூலை 1-ம் தேதி ஹவுசிங் டாட் காம் நிறுவ னத்தில் இருந்து ராகுல் யாதவ் நீக்கப்பட்டார். இவரது நடவடி கைகளால் நிறுவனத்துக்கு எந்த பலனும் இல்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை கூறி இயக்குநர் குழு இவரை வெளியேற்றியது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் திறமை மீது அதிருப்தி தெரிவித்திருந்தார் ராகுல் யாதவ்.