Published : 17 Jul 2015 10:01 AM
Last Updated : 17 Jul 2015 10:01 AM

தென்னிந்திய நகரங்களுக்கு குறைந்த கட்டணம்: ட்ரூஜெட் விமான சேவை தொடக்கம்

இந்திய விமான சேவை துறையில் புதிய நிறுவனமாக ட்ரூஜெட் விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த விமான சேவை நிறுவனம் இயங்கும்.

முக்கியமாக தென்னிந்திய நகரங்களை இணைக்கும் விதமாக செயல்படும் இந்த விமான சேவை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையிலிருந்து ராஜமுந்திரிக்கு தனது முதல் பயணத்தை இந்த விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்த புதிய விமான சேவையை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்கு நருமான உமேஷ் அறிமுகப்படுத்தி பேசினார். தென்னிந்திய நகரங் களை இணைக்கும் விதமாக இந்த விமான சேவை செயல் பட உள்ளது. தற்போது விமான சேவையில் இருக்கும் நிறுவனங்கள் முக்கிய பெரு நகரங்களுக்கான சேவை களில் மட்டும் கவனம் செலுத்து கின்றன. இரண்டாம் நிலை நகரங் களுக்கான விமான சேவை என்பது வெற்றிடமாகவே உள்ளது.

அந்த இடத்தை குறிவைத்து இந்த விமான சேவை தொடங் கப்பட்டுள்ளது என்றார். முக்கி யமாக பெரு நகரங்களை இணைக்கும் விதமான இந்த சேவை இருக்கும்.

தற்போது ஆந்திராவில் புஷ்கர் விழாவுக்காக சென்னை- ராஜமுந்திரி- சென்னை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஹைதராபாத்- ராஜமுந்திரி- ஹைதராபாத் விமான சேவை ஜூலை 12 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் ஜூலை 25 வரை செயல்படுத்தப்படும். ஜூலை 26க்கு பிறகு விமான பயண கால அட்டவனை முறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சிறு நகரங்களுக்கான விமான சேவையுடன், அந்த நகரங்களுக்கு அருகிலிருக்கும் முக்கிய இடங்களுக்கும் போக்குவரத்து வசதியை ட்ரூஜெட் அளிக்கும். இதனால் பயணிகள் விமான நிலையங்களை அடைவது எளிதாக இருக்கும்.

தற்போது இந்த நிறுவனம் 5 விமானங்களுடன் சேவையை தொடங்கியுள்ளது. விரைவில் கூடுதலாக 2 விமானங்களை இயக்க உள்ளதாகவும் உமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். இந்த நிறுவனத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் 26 சதவீதம் முதலீடு செய்துள்ளார். நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்களுக்கு அடிப்படை விமான கட்டணத்திலிருந்து 10 சதவீத தள்ளுபடி சலுகை அளிப்பதாகவும் நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x