

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வருவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோன்ற விண்ணப்பங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இது குறித்து இறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று ஐசிஐசிஐ வங்கியின் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், வீட்டுக்கடன் நிறுவனத் தில் பகுதியளவிலான பங்குகள் விற்கப்படுமா அல்லது நிறு வனம் முழுவதும் விற்க திட்டமிட் டிருக்கிறதா என்பது குறித்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப் படவில்லை.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி ஆண்டில் இந்த ஹோம் பைனான்ஸ் நிறுவனம் 197.57 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டி இருந்தது. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் தங்க ளுடைய வீட்டுக்கடன் பிரிவை விற்றுவிட்டு, முக்கிய பிஸினஸில் மட்டும் கவனம் செலுத்துகின்றன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக்கடன் பிரிவை விற்க திட்ட மிட்டிருப்பதாக அறிவித்திருக் கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வீட்டுக்கடன் பிரிவு நிறுவனத்தின் பகுதி பிஸினஸை ஏற்கெனவே விற்றுவிட்டது.
சமீபத்தில் வெளியான ஆண் டறிக்கை தகவல்படி ஐசிஐசிஐ ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருவது தெரி கிறது. சிறுநகரங்களில் வாங்கும் போக்கு அதிகரித்து வருவதால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் வீட்டுக்கடன் பிஸினஸில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிறுவனங்கள் ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்தில் கவனம் செலுத்துகின்றன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத் தின் முடிவில் 1.18 சதவீதம் உயர்ந்து 313 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.