

என்டிபிசி, ஆயில் இந்தியா நால்கோ உள்ளிட்ட பத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மூன்று வருடங்களுக்குள் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால், இந்த பங்கு விலக்கல் நடவடிக்கை சந்தை நிலவரத்தை பொறுத்தே இருக்கும் என்று மெர்ச்சன்ட் வங்கிகளுக்கு பங்குவிலக்கல் துறை தெரிவித்திருக்கிறது.
இந்த பங்குகளை விலக்கிக் கொள்ள மெர்ச்சன்ட் வங்கிகளை நியமிக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த அனைத்து பங்கு விலக்கல் நடவடிக்கைகளும் மூன்று வருடங்களுக்குள் முடிந்து விடுமா என்று மெர்ச்சன்ட் வங்கிகள் கேட்டதற்கு, பங்குச்சந்தை நிலவரம் மற்றும் இதர சூழ்நிலைகளை பொறுத்தே இது அமையும் என்று பங்கு விலக்கல் துறை தெரிவித்திருக்கிறது.
மெர்ச்சன்ட் வங்கிகள் தங்களது விண்ணப்பங்களை வரும் 24-ம் தேதிக்குள் பங்கு விலக்கத்துறை யிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலமாக 69,500 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.