

இன்போசிஸ் நிறுவனர்களின் ஒருவரான நந்தன் நிலகேணி புதிய தொழில் முனைவு (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நிலகேணி தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப துறையில் மீண்டும் கவனம் செலுத்த உள்ள நிலகேணி, புதிய தளங்களில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆலோசகராக திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழில் முனைவு நிறுவனங்களுக்காக கதவுகளை திறந்து வைத்துள்ளேன். தொழில் முனைவோர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும் என்றும், இதற் காக நேரத்தை ஒதுக்கி வருகிறேன் என்றும் நிலகேணி குறிப்பிட்டார். இவர் சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏரோஸ்பேஸ் என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் குறிப்பிட்ட இவர், தன்னால் அரசியலுக்கு வெளியிலிருந்துதான் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். இவர் தற்போது நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன், ஐ-ஸ்பிரிட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப அலோசனை வழங்கி வருகிறார்.