Published : 10 Jun 2015 10:30 AM
Last Updated : 10 Jun 2015 10:30 AM

ரயில் திட்டங்களுக்கு ரூ.8.56 லட்சம் கோடி தேவை: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

ரயில் திட்டங்களை நிறைவேற்றிட அடுத்த 5 ஆண்டுகளுக்கு 8 லட்சத்து 56 ஆயிரத்து 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் ரயில்வே துறையில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் கே அகர்வால் தெரிவித் துள்ளார்.

இந்திய தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ) சார்பில் தெற்கு ரயில்வேயில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் தொடர்பான கருத் தரங்கம் சென்னை கிண்டி யில் நேற்று நடத்தப்பட்டது. இதில் அசோக் கே அகர்வால் பேசியதாவது:

உலகிலேயே இந்திய ரயில்வே பழம் பெரும் துறையாக இருக்கிறது. சாலை போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில்வே போக்குவரத்துக்கு 6 மடங்கு செலவு அதிகமாகும். நாடுமுழுவதும் ரயில் போக்கு வரத்து தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் முதலீடுகளும் அதிகம் தேவைப் படுகிறது.

நாட்டிலுள்ள 1,900 திட்டங் களுக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவையாகவுள்ளது. வரும் 2020-ல் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 2 கோடியிலிருந்து 3 கோடியாக அதிகரிக்கும். மேலும் ரயில்பாதை 1,14,000 கி.மீ இருந்து 1,38,000 கிலோமீட்டராக அதிகரிக்கும்.

ரயில் திட்டங்களை நிறை வேற்றிட அடுத்த 5 ஆண்டு களுக்கு 8 லட்சத்து 56 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து முதலீடு செய்தல் மூலம் முதலீடுகள் திரட்டப்பட்டு வருகின்றன.

ரயில்வேயில் ரயில்பாதைகள் புதுப்பித்தல், இரட்டை பாதைகள் அமைத்தல், பாலங்கள் அமைத் தல், மேம்பாலங்கள் அமைத்தல், சிக்னல்கள் அமைத்தல், ரயில் களுக்கு போதிய வசதிகள் அமைத்தல், ரயில் நிலையங் களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதலீடு களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

மொத்தம் 7,000 கி.மீ தூரத்துக்கு இரட்டை, 3, 4வது பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 2015-16-ல் 1200 கி.மீ ரூ.8,686 கோடியில் புதியதாக பாதைகள் அமைக்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் ரயில்வே திட்டப்பணிகளுக்காக ரூ.1 லட்சத்து 11 கோடி முதலீடு தேவைப்படுகிறது. இதில், மத்திய அரசு 41.6 சதவீதம் நிதியுதவி அளிக்கவுள்ளது.

மற்றவை மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன பங்களிப்புடன் நிதி திரட்டப்படும்.

ராயபுரத்திலிருந்து துறைமுகம் வரையில் 3, 4வது ரயில் பாதைகள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் முடிவடைந்தால், சரக்கு ரயில் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் முக்கியமான ரயில் நிலையங்களில் அதிக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி, பாதுகாப்பு பணிகள் 2 மாதங்களில் தீவிரப்படுத்தப் படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x