

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ரக எஸ்யுவி மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விற்பனை விலை டெல்லியில் ரூ. 1.49 கோடியாகும்.
புதிய ரக எம்எல்63 ஏஎம்ஜி கார் மிகச் சிறந்த செயல்பாடு கொண்டது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எபார்ட்கெர்ன் தெரிவித்தார். டெல்லியில் வியாழக்கிழமை இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கார் 5.5 லிட்டர் வி8 பி டர்போ என்ஜின் கொண்டது. இதன் உச்சபட்ச வெளிப்படும் சக்தி 410 கிலோவாட்டாகும். இதன் அதிகபட்ச டார்க் திறன் 760 என்எம் ஆக இருக்கும்.
இந்தியச் சந்தையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட சொகுசு கார்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே புதிய எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.