ஐரோப்பிய யூனியனிடையே தாராள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆகஸ்ட் மாதத்தில் தொடக்கம்

ஐரோப்பிய யூனியனிடையே தாராள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆகஸ்ட் மாதத்தில் தொடக்கம்
Updated on
1 min read

இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே தாராள வர்த்த கத்தை ஊக்குவிக்கும் வகை யிலான பேச்சுவார்த்தை இருதரப்பினரிடையே ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தகவலை வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டு இடை வெளிக்குப் பிறகு இரு தரப் பினரிடையே இத்தகைய பேச்சு வார்த்தை இப்போது தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் தாராள வர்த் தகம் தொடர்பாக பேச்சு நடத்த ஐரோப்பிய நாடுகளின் தலைமை பிரதிநிதி ஒப்புக் கொண்டுள்ளதாக ராஜீவ் கெர் தெரிவித்தார்.

2013-ம் ஆண்டு மே மாதம் இருதரப்பினரிடையே இது தொடர்பாக பேச்சு நடைபெற்றது. அப்போது சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது இருதரப்பினரும் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடை யிலான ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் குறைந்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என்று ராஜீவ் கெர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஜவுளி மற்றும் தோல் பொருள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் வரியற்ற வர்த்தகம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்கு உள்ளது. பொதுவான பேச்சு வார்த்தையாக இல்லாமல் நமது நலன்கள், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உத்தி சார்ந்து இருக்கும் என்று கெர் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக பேச்சு வார்த்தையானது பரந்துபட்டதாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தமாக (பிடிஐஏ) இருக்கும். இருப்பினும் இந்திய தரப்பில் கூறப்பட்ட அரசு முதலீடுகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளை அனுமதிப்பது மற்றும் ஆட்டோமொபைல், மதுபான தயாரிப்பில் கூட்டாக ஈடுபடுவது உள்ளிட்டவற்றை முந்தைய பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியன் ஏற்கவில்லை. ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கியது. இருப்பினும் இருதரப் பினருமே முந்தைய கால வரை யறை இலக்குகளை நிறைவேற்றவில்லை.

28 நாடுகள் அடங்கிய இந்த கூட்டமைப்பில் தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சி னைகள் மற்றும் பன்முக இலச் சினை தயாரிப்புகளை (மல்டி பிராண்ட்) சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பது உள்ளிட்ட நிபந்த னைகளை இந்தியா ஏற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in