காபி டே பொதுப்பங்கு வெளியீடு: ரூ.1,150 கோடி திரட்ட திட்டம்

காபி டே பொதுப்பங்கு வெளியீடு: ரூ.1,150 கோடி திரட்ட திட்டம்
Updated on
1 min read

முன்னணி காபி ஷாப் நிறுவனமான காபி டே என்டர்பிரைசஸ் நிறுவனம் பொது பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) விண்ணப்பித்திருக்கிறது. இதன் மூலம் ரூ.1,150 கோடி திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் கே.கே.ஆர்., ஸ்டான்சார்ட் பிரைவேட் ஈக்விட்டி, நியூசில்க் ரூட் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜி சித்தார்த்தா வசம் 54.78 சதவீத பங்குகள் உள்ளன. அனைத்து நிறுவனர்களையும் சேர்த்து 92.74 சதவீத பங்குகள் நிறுவனர்கள் வசம் உள்ளன.

கே.கே.ஆர். நிறுவனத்திடம் 3.43%, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி வசம் 1.77 சதவீத பங்குகள் உள்ளன.

2013-14ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,154 கோடி ரூபாயாக உள்ளது. 189 கோடி ரூபாய் அளவுக்கு செயல்பாட்டு லாபம் இருக்கிறது. 1996-ம் ஆண்டு பெங்களூருவில் முதல் கடை திறக்கப்பட்டது. இப்போது 1,500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் 46 சதவீத பங்கினை காபிடே வைத்திருக்கிறது.

ஆர்பிஎல் வங்கி ரூ.1,100 கோடி ஐபிஓ

ஆர்பிஎல் வங்கி (முன்னர் ரத்னாகர் வங்கி) ஐபிஓ வெளியிட செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் ரூ.1,100 கோடி திரட்ட வங்கி முடிவு செய்திருக்கிறது. பிகான் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி, ஜிபிஇ (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் இந்த வங்கியில் முதலீடு செய்திருக்கின்றன.

2014-15ம் நிதி ஆண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ. 2,071 கோடியாக இருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 926 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் நிகர வாராக்கடன் ரூ. 38.59 கோடி ரூபாயாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in