

தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி சேமிப்பு கணக்குக் கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி 6 சதவீதமாக்கியுள்ளது.
இந்த வங்கியின் காசா விகிதம் (சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் உள்ள டெபாசிட்) மார்ச் மாதத்தில் 16.7 சதவீதமாக இருந்தது. இது மிகவும் குறைவாகும்.
அதனால் ரூ.5 லட்சம் வரையி லான சேமிப்பு திட்டங்களுக்கு 5 சதவீதம் வட்டியும், ரூ.5 லட்சத் துக்கும் மேற்பட்ட டெபாசிட் களுக்கு 6 சதவிதம்வரை வட்டி வழங்க முடிவெடுத்துள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதத்தை கடைசியாக 2014 செப்டம் பர் மாதத்தில்தான் உயர்த்தியது.
உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் என்றும், இதற்கான வட்டி வீதம் தினசரி அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் கூறியுள்ளது.