

மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வீடியோகான் நிறுவனம் தற்போது 7 அங்குல திரை கொண்ட டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்றின் விலை ரூ. 4,900 ஆகும். விஏ 81எம் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த டேப்லெட்டில் 1.3 கிகாஹெர்ட்ஸ் டியூயல் கோர் பிராசஸர், 512 எம்பி ராம், 4 ஜிபி உள்ளடங்கிய நினைவகம் (இதை 32 ஜிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்) ஆகியன உள்ளன.
இதில் புளுடூத், 3ஜி, வை-பை, 2 மெகாபிக்செல் பின்புற கேமரா ஆகியன உள்ளன. இதில் இரண்டு சிம் கார்டு வசதி உள்ளது. ஜிபிஎஸ் மற்றும் வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளன. கட்டுபடியாகும் விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக தங்கள் நிறுவன டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெரால்ட் பெரைரா தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அகல திரை, விளையாட்டுகளை விளையாடுவதற்கான வசதி ஆகியன இதில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.