

செல்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள செல்கான் நிறுவனம் தெலங்கானா மாநிலம் மேட்சல் பகுதியில் தனது உற்பத்தி ஆலையை நேற்று தொடங்கியுள்ளது.
30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை நேற்றிலிருந்தே உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. அடுத்த காலாண்டுக்குள் இந்த ஆலையின் மாத உற்பத்தி 5 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த ஆலையுடன் இணைந்த 10 ஆயிரம் சதுர அடியில் கிடங்கு வசதியையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
இதில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் மூலப் பொருள்களும், 5 ஆயிரம் சதுர அடியில் உற்பத்தியான செல்போன்களும் வைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலை மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.