

கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து 58.47 என்ற நிலையில் உள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து வெளிநாட்டு முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளதால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குச்சந்தையிலும், வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 275.82 புள்ளிகள் உயர்ந்து 24,397.56 புள்ளிகளாகவும், நிப்டி 65.40 புள்ளிகள் உயர்ந்து 7,268.40 புள்ளிகளாகவும் இருந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங்சென், ஜப்பானின் நிக்கெய் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.