

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஹைட்ரோகார்பன் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனம், பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-யிடமிருந்து ரூ. 2,715 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
நிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்தப் பணியை 2017-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்நிறுவனம் நிறைவேற்றித் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இப் பணியை நிறைவேற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் எல்டிஹெச்இ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற் கான அனுமதியை கடும் போட்டிக் கிடையே பெற்றுள்ளது. மும்பை யின் மேற்கு கடலோரப் பகுதி களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியை இந்நிறுவனம் மேற் கொள்ளும்.